மரண அறிவித்தல் : கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா!!கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா
இளைப்பாறிய தபால்கந்தோர் உத்தியோகத்தர் (அநுராதபுரம்)


பிறப்பு : 22.07.1950
இறப்பு : 21.11.2018

அநுராதபுரம் திஸவேவவை பிறப்பிடமாகவும், இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வாநகர் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும், காந்தி வீதி, தோணிக்கல், வவுனியாவில் வசித்து வந்தவருமான அமரர் கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா அவர்கள் கடந்த 21.11.2018 புதன்கிழமை அன்று காலை காலமானார்.அன்னார் அமரர் அருளையா சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அமரர் அருணாசலம், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும், அமரர் ஜெயராஜா சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும், பிரின்ஸ் சிங்கராஜா அருளையா (கனடா), பிரிஸில்லா கிருஷ்ணதேவி ராசநாயகம் (கனடா), லெஸ்லி தேவராஜ் அருளையா (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

ராஜமோகன் (நீர்கொழும்பு), ஜெயந்தினி (வவுனியா), ஜெயக்குமார் (சன் டெக்ஸ்டைல், சேவியர்கடை சந்தி, கிளிநொச்சி), வசந்தினி (லண்டன்), சனோஜ் (வவுனியா) ஆகியோரின் அன்புமிகு தந்தையாரும்,


கலாமேரி, மயில்வாகனம், மஞ்சு, சற்குணம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், தனுச சஞ்சீவன், டர்மிகா, ரம்ஷிகா, கர்ஷிகா, ரக்ஷா, யுக்ஷா, டனிசா, தேஜஸ் ஆகியோரது பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரது ஈமக்கிரியைகள் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வா நகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மதியம் 01 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனந்த நகர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார், உறவினர், அயலவர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளும்படி அறியத் தருகின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சனோஜ் – 0768313027
ஜெயக்குமார் – 0777456605