லண்டன் காதலி… 3 மனைவிகள் : பறிபோன தங்க கழிப்பறை : விஜய் மல்லையாவின் மிரளவைக்கும் சொகுசு வாழ்க்கை!!

597

 

விஜய் மல்லையா

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் விஜய் மல்லையா யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார்.

தொழிலதிபராக இருந்தாலும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போன விஜய் மல்லையாவின் , போர்முலா ஒன் டீம் போர்ஸ் இந்தியா, ஐபிஎல் கிரிக்கெட் குழுவான ராயல் சாலேன்ஜெர்ஸ் பெங்களூர், மற்றும் இவருடைய இயந்திர படகு, இந்தியன் எம்ப்ரேஸ் போன்றவை மக்களால் அதிகம் அறியப்பட்டது.

2005 ல் கிங் பிஷர் விமான நிறுவனம் விஜய் மல்லையா நிறுவினார். தற்போது, இவ்விமான உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவை மூலம் 32 நகரங்களை இணைக்கிறது. ஒரு தொழிலதிபராக இவர் இருந்தபோதிலும், தனது விமான பணிப்பெண்களோடு இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது, குடிபோதை, பகட்டான வாழ்க்கை ஆகிய காரணங்களினால் அதிகம் அறியப்பட்டார்.

இதன் காரணத்தினாலேயே விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனிற்கு தப்பி சென்றார். கடனை அடைக்காத காரணத்தால், தற்போது இவரது சொத்துக்கள் ஒவ்வொன்றும் ஏலத்திற்கு வருகிறது.

என்னதான் தனக்கு இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் பெண்களுடனான சொகுசு வாழ்க்கையை இவர் கைவிட்டது கிடையாது. ஏற்கனவே தனது வாழ்க்கையில் இரண்டு பெண்கள் இருந்போதிலும், லண்டனில் தற்போது மூன்றவாது பெண்ணுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

Sameera Tyabjee : விஜய் மல்லையா 1986 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தின் மூலம் அமெரிக்காவுக்கு பயணம் செய்த போது, அந்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த Sameera Tyabjee என்ற பெண் மீது காதல் கொண்டுள்ளார். இந்த காதல் திருமணத்தில் முடிந்ததையடுத்து, இவர்களுக்கு சித்தார்த் மல்லையா என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

Rekha Mallya : 1993 ஆம் ஆண்டு தனது பள்ளித்தோழியான ரேகாவை சந்தித்துள்ளார். ரேகாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகியுள்ள நிலையில், விஜய் மல்லையா அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு Leanna மற்றும் Tanya என்ற இருபிள்ளைகள் உள்ளனர். அதன்பிறகு ரேகாவை பிரிந்தார் விஜய் மல்லையா.

Pinky Lalwani : இவர் மூன்றவாது மனைவி ஆவார். Kingfisher Airlines – இல் இவர் பணியாற்றியபோது இவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். லண்டனில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு சொகுசு பங்களாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், ஐதராபாத்தில் நடந்த தேசிய பழங்குடி இன தொழில் அதிபர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி ஜூவல் ஓரம் வங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவை போன்று மிடுக்காக இருங்கள் என புழ்ந்து பேசினார். ஆக மொத்தத்தில், என்னதான் கடன் பிரச்சனைகள் இருந்தாலும் தனது சொகுசு வாழக்கையை ஒருபோதும் புறக்கணிக்காமல் வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த யுபிஎஸ் வங்கி மல்லையாவின் அடமானக் கடனின் பேரில் லண்டன் கார்ன்வால் டெரஸில் உள்ள மல்லையாவின் ரீஜென்ட்ஸ் பார்க் மேன்ஷன் பறிமுதல் செய்யப்பட உள்ளது. அந்த மேன்ஷனில் மல்லையா வைத்துள்ள தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறையும் பறிமுதல் செய்யப்படவுள்ளது.

யுபிஎஸ் வங்கிக்குச் செலுத்த வேண்டிய அடமானக் கடன் தொகை 20.4 மில்லியன் பவுண்ட் செலுத்தப்படாததால் இந்தச் சொத்துகளை வங்கிப் பறிமுதல் செய்கிறது.

கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட இந்த தங்க கழிப்பறையை விஜய் மல்லையா வைத்திருப்பது சமீபத்தில் தான் வெளி உலகிற்கு தெரியவந்தது. தற்போது, அந்த கழிப்பறையும் பறிபோயுள்ளது. மேலும் லண்டன் நீதிமன்றம் யுபிஎஸ் வங்கிக்கு மல்லையா தரப்பு 88,000 பவுண்ட் இடைக்கால சட்ட கட்டணங்களாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.