எட்டு மாத குழந்தையின் தாயார் மரணத்தில் மர்மம் : வட்ஸ் அப் தகவலை காட்டி கதறும் பெற்றோர்!!

549

 

கதறும் பெற்றோர்

கேரள மாநிலம் கொச்சியில் ஆற்றில் இருந்து இளம் தாயாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பொலிசார் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என அவரது பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 28 ஆம் திகதி பெரியாற்றில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்க்கப்பட்ட ஆன்லியா என்ற 25 வயது இளம் தாயாரின் பெற்றோர்களே தற்போது முறையிட்டுள்ளனர். தங்களது மகள் மாயமாவதற்கு சில மணி நேரம் முன்பு பகிர்ந்து கொண்ட வாட்ஸ் அப் தகவல்கள், உண்மையான காரணம் என்ன என்பதை புரிந்துகொள்ள உதவும் சாட்சியம் என ஆன்லியாவின் பெற்றோர்களான ஹைஜினஸ் மற்றும் லீலாம்மா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திருமணம் முடிந்து 8 மாத ஆண் குழந்தையின் தாயாருமான ஆன்லியா மரணமடையும்போது அவர் எம்.எஸ்.ஸி செவிலியர் மாணவி என கூறப்படுகிறது. சம்பவத்தன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கும் தேர்வில் பங்கேற்க ஆன்லியா சென்றதாகவும், அவரை ஆகஸ்டு 25 ஆம் திகதி ரயில் நிலையத்தில் கொண்டு விட்டுள்ளார். ஆனால் அன்றைய தினமே தமது மனைவி மாயமானதாக ஜஸ்டின் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே 28 ஆம் திகதி இரவு 10.40 மணியளவில் பெரியாற்றில் இருந்து ஆன்லியாவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்வியிலும் கலையிலும் சிறந்துவிளங்கிய ஆன்லியாவின் தினசரி குறிப்புகள், அவரது சகோதரருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் தகவல்கள் என அனைத்தும் பரிசோதனை மேற்கொண்டால் அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் தெரியவரும் என கூறும் பெற்றோர்கள், ஆன்லியாவுக்கு தமது எதிர்காலம் தொடர்பில் தெளிவான இலக்கு இருந்ததாகவும், அவர் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ளும் பெண் அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.