கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. குறித்த பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீரர் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப் கேணல் கில்மன் ஆகிய மாவீர்ர்களின் தந்தையார் ஏற்றியுள்ளனர்.
தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க விடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பபட்டன.
1991ம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர் உருவாக்கப்பட்ட கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த 2008ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் போரின் போது வீரச்சாவடைந்த முன்னாள் அரசியற் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் தளபதி வீரமணி மற்றும் தளபதிகள் மாவீரர்கள் போர் உதவிப்படை வீரர்கள் துணைப்படை வீரர்கள் என சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின்வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.













