சூரியனை நெருங்கி சென்ற ஐசோன் தப்பிப் பிழைத்ததா?

344

isonசூரியனை நேற்று நெருங்கி வந்த ஐசோன் எரி நட்சத்திரத்தின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கக்கூடும் என்று விண்ணியலாளர்கள் கூறுகிறார்கள்.

சூரியனின் வெம்மை மற்றும் ஈர்ப்பு சக்தியினால் இந்த ஐஸ் மற்றும் அழுக்குத் துகள்களாலான எரிநட்சத்திரம் அழிந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் இந்த எரி நட்சத்திரம் விண்ணியலாளர்களின் பார்வையிலிருந்து மறைந்து இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னர் ஏதோ ஒன்று மீண்டும் வெளிவந்தது என்று கூறும் அமெரிக்க கடற்படை விண்ணியலாளர்கள், இந்த எரி நட்சத்திரத்தின் வால் ஒருக்கால் இன்னும் நமது இரவில் ஒளிரலாம் என்று கூறுகிறார்கள்.

இந்த எரி நட்சத்திரம் சூரியனை, சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக நெருங்க சுமார் 55 இலட்சம் ஆண்டுகள் பயணிக்கவேண்டியிருந்தது.