வவுனியாவில் போதைப்பொருள் பாவனையை தடுத்தல் மற்றும் குறைத்தல் நிகழ்ச்சித்திட்டம்!!

338

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் மதுசாரம் , புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை குறைத்தல் மற்றும் தடுத்தல் நடவடிக்கைகள் ஊடாக வன்முறையற்ற சிறந்த மாணவ சமுதாயத்தினை உருவாக்கும் நோக்குடன் நேற்றையதினம் வவுனியா விபுலானந்தாக்கல்லூரி தரம் 12, 10, 9, 8 மாணவர்களுக்கு RAHAMA (wfkh) நிறுவனத்தின் அனுசணையுடன் FIRM ( கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனம்) நிறுவனத்தினாலும் சமூக சேவைத் திணைக்களத்தினாலும் ஒழுங்குப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு மூலம் 300 மாணவர்களுக்கு விழிப்பூட்டப்பட்டுள்ளது

அதன் போது மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் முன்வைக்கப்பட்ட விடயம் :
பாடசாலையில் மதுசாரத்திற்கு எதிரான செயற்குழு ஒன்றினை அமைத்து தமது செயற்பாடுகள் தொடர்பான விடயங்களையும் தாங்கள் எதிர்நோக்கிய சாவால்களையும் மாதாந்தம் கலந்துரையாடி பொருத்தமான செயல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் மீளாய்வு செய்தல்

பாடசாலை மட்டத்தில் மதுசாரம் புகைத்ததல் மற்றும் போதைப்பொருள் பாவனையை குறைப்பதற்கான வலைப்பின்னல் செயற்பாட்டினை உருவாக்கி நடைமுறைப்படுத்தல் மற்றும் தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளல்.

இதன் போது உரையாற்றிய RAHAMA நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் தமது சகல செயல் நடவடிக்கைகளிலும் பயனாளிகளையும், அவர்கள் சார்ந்தவர்களையும் சமூகத்தையும் மதுசாரம், புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையிலால் ஏற்படும் விளைவுகளில் இருந்து பாதுகாப்பதை முக்கியமான விடயமாக கொண்டு செயற்படுகின்றது.

முக்கியமாக நல்லதொரு ஒழுக்கமுள்ள மாணவ சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் மாணவர்களின் செயற்பாடுகள் இருக்க வேண்டும் மென குறிப்பிட்டார்.