உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை கட்டுவதற்கு சுதந்திர சர்வதேச கப்பல் (Freedom ship International) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தை சேர்ந்த இந்த நிறுவனமானது ஷாப்பிங் மால்கள், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மேல் தளத்தில் ஓர் விமானம் போன்ற வசதிகளை உள்ளடக்கி 350 அடி உயரமும் 4500 அடி நீளமும் கொண்டு கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.
மேலும் இப்பிரம்மாண்ட ராட்சத கப்பல் 80 000 பேர் தங்குவதற்கான வசதியோடு அமைக்கப்பட உள்ளது. துறைமுகங்களில் நிறுத்த இயலாத இந்த கப்பல் எப்போதும் உலகத்தை சுற்றிதான் வந்துகொண்டிருக்கும்.
ஆனால் இங்கு தங்க வரும் மக்களின் தேவையை நிறைவேற்ற விமானம் ஒன்று கப்பலுக்கும் கரையிலுள்ள நாடுகளுக்கும் இடையே பறந்துக்கொண்டிருக்கும் வசதியினையும் செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தினை தொடங்குவதற்காக 1 மில்லியன் டொலர் நிதி உதவியினை இந்த நிறுவமானது அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.