இலங்கையில் இடம்பெறுகின்ற பாலியல் வன்முறைகளை தடுக்க உதவுவது குறித்து இலங்கையின் பதிலை எதிர்ப்பார்ப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் பாலியல் வன்முறைகளை தடுக்க இலங்கைக்கு உதவமுடியும் என்று ஏற்கனவே இலங்கையின் வெளியுறவு அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவருடைய பதிலை தாம் எதிர்ப்பார்ப்பதாக ஹேக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில பாலியல் வன்முறைகள் குறித்த செய்திகள் நாள்தோறும் செய்திதாள்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் பொதுநலவாய நாடுகளின் விழுமியங்களுக்கு ஏற்ப அவற்றை கட்டுப்படுத் த பிரித்தானியாவால் இலங்கைக்கு உதவ முடியும் என்று ஹேக் குறிப்பிட்டார்.