2017ஆம் அண்டு இங்கிலாந்தில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர் தொடர்பாக எதிர்பார்ப்புகளுடன் காணப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உலக டெஸ்ற் சம்பியன்ஸிப் போட்டிகளின் படி 2017ம் ஆண்டு உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் 4 இடங்களில் காணப்படும் அணிகளும் உலக டெஸ்ற் சம்பியன்ஸிப் தொடரில் பங்குபற்றவுள்ளன.
இந்த முறையின் படி அனைத்து டெஸ்ட் போட்டிகளும் முக்கியமானவையாகக் காணப்படவுள்ளன. தொடரை மாத்திரம் வெற்றிகொள்வது நீண்ட கால நோக்கில் போதுமானதாகக் காணப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அர்ஜுன ரணதுங்க டெஸ்ட் போட்டிகளை மேலே உயர்த்துவதற்கு ஏதாவதொன்று செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இந்த டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர் சில நாடுகளும், சில வீரர்களுக்கும் சிறந்த ஆதரவை வழங்கும் எனக் குறிப்பிட்டார்.
சில நாடுகளில் ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு முழுமையாக சாதகமானதானவையாகக் காணப்படும் நிலையில், டெஸ்ட் சம்பியன்ஸிப் போட்டிகள் இடம்பெறும் ஆடுகளங்கள் சமநிலையானவையாகக் காணப்படும் என அவர் தெரிவித்தார்.