இன்று வெள்ளிக்கிழமை : மகிந்த – ரணில் திடீர் சந்திப்பு!!

656

பிரதமர் மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இன்று முற்பகல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சந்தித்த பின்னர், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக் காலமாக வெள்ளிக்கிழமைகளில் முக்கிய முடிவுகளை எடுத்து வருவதால், இன்றைய தினமும் ஏதேனும் முக்கிய முடிவை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். அதேபோல் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்தார்.