வவுனியா நகரசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை : நகரசபை உறுப்பினர் ஆர்.எம். லரீப்!!

547

வவுனியா நகரசபையில் உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் அனைத்தும் தீர்மானங்களாக முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் வருகின்றனவே தவிர அதனை நிறைவேற்றுவதற்குரிய எவ்விதமான நடவடிக்கையும் இடம்பெறுவதில்லை இவ்விடயத்தில் தலைவர் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நேற்று இடம்பெற்ற 8ஆவது நகரசபை அமர்வின்போது அகில இங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நகரசபை உறுப்பினர் ஆர். எம். லரீப் தெரிவித்துள்ளார்.
.
மேலும் உயரிய சபையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் காட்டி வருகின்றனர்.

இவ்விடயத்தில் நகரசபை தலைவர் உடனடியாக தலையிட்டு அத் தீர்மானங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபையில் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக பள்ளிவாசல் முன்பாக அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையம், மடுவத்திற்கு சி.சி.ரி கமரா பொருத்துதல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் பெரும்பான்மையான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதிலும் இன்றுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சபையில் அனுமதி பெறப்பட்டபோதிலும் பல விடயங்களில் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை என்றுநகரசபை உறுப்பினர் ஆர். எம். லரீப் மேலும் தெரிவித்துள்ளார்.