அஜித் ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வு!!

260

ajithஅஜித் ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வு எடுக்கிறார். இதற்காக டிசம்பர் 10ம் திகதி புறப்படுகிறார்.

கவுதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10ம் திகதி துவங்குகிறது. ஆரம்பம் படத்தில் ஒரு சண்டை காட்சியில் அஜித் நடித்தபோது விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டது. மும்பையில் படமாக்கப்பட்ட அந்த சண்டை காட்சியில் அஜித்துக்கு பதில் டூப் நடிகரை நடிக்க வைக்க இயக்குனர் விஷ்ணுவர்த்தன் முடிவு செய்தார். ஆனால் அஜீத் டூப் வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று பிடிவாதமாக இந்த சண்டை காட்சியில் நடித்தார்.

காலில் ஒப்ரேஷன் செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர். ஆனால் அஜித் மறுத்துவிட்டார். ஆரம்பம், வீரம் படங்களை முடித்துவிட்டு ஒப்பரேஷன் செய்து கொள்வதாக கூறினார். தற்போது ஒப்ரேஷன் செய்து கொள்ளும் முடிவை மேலும் தள்ளி வைத்துள்ளார். கவுதம்மேனன் படத்தை முடித்த பிறகே ஒப்ரேஷன் செய்து கொள்கிறார்.