விஜய், அஜித்துடன் மோதும் வடிவேலு!!

1022

vadiveluவிஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகின்றன. இதோடு வடிவேலுவின் ஜெகஜால புஜபல தெனாலிராமன் படமும் மோதுகிறது. இந்த படத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நாயகியாக மீனாட்சி தீட்சித் நடித்துள்ளார். யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார்.

முழு நீள காமெடி படமாக தயாராகியுள்ளது. ஏற்கனவே வடிவேலு நடித்து ஹிட்டான இம்சை அரசன் 23ம் புலிகேசி பட சாயலில் சரித்திர கால படமாக இதை எடுத்துள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

வடிவேலு படத்தையும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட முயல்கிறார்கள். ரஜினியின் கோச்சடையான் படமும் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ரஜினி படம் ரிலீசானால் தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் கோச்சடையான் படம் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என தெரிகிறது.