திரிஷாவுக்கு திருமண ஏற்பாடு தீவிரம்!!

305

Trishaநடிகை திரிஷா 2002ல் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு படங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாய் நடித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது தமிழில் பூலோகம், என்றென்றும் புன்னகை படங்கள் கைவசம் உள்ளன. இதன் படப்பிடிப்புகள் முடிந்துள்ளது.

வேறு புது படங்களுக்கு ஒப்பந்தம் ஆகவில்லை. இளம் நடிகைகள் வரத்து பெருகியுள்ளதால் மூத்த கதாநாயகிகளின் மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. வயதான நடிகர்களும் புது நடிகைகளையே ஜோடியாக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

எனவே திரிஷாவுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் தாய் உமா இறங்கியுள்ளார். ஆனால் திரிஷாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இன்னும் கொஞ்சம் காலம் தள்ளிப் போடலாம் என்று இருக்கிறார்.

இது தாய் உமாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம். விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. திருமணத்தை இனிமேலும் தள்ளிப் போடக்கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறார். ஜாதகத்தை வைத்து பொருத்தமான மாப்பிள்ளை தேடுகிறார்.

ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணாவையும் திரிஷாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்துள்ளார்கள்.
அடுத்த வருடம் துவக்கத்தில் திரிஷா திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.