செல்லிடப்பேசி பற்றரியின் ஊடாக தங்கம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சென்னைக்கு இந்த தங்கம் கடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புறக்கோட்டை இலத்திரனியல் சாதன வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு தங்கத்தை கடத்த முயற்சித்துள்ளார்.100 கிராம் எடையுடைய தங்கம் கடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தங்கத்தின் பெறுமதி ஐந்து லட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகவும், தங்கம் கடத்தியதற்கு அபராதமாக 50,000 ரூபா விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.




