நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன் : நடிகை ராதா ஆவேசம்!!

278

Radhaசுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா, காத்தவராயன், அடாவடி, மானஸ்தன், கேம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வடபழனி சாலிகிராமம் லோகைய்யா தெருவில் வசித்து வரும் இவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் மீது, பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட பைசூல் 50 இலட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இதுபற்றி வடபழனி உதவி கமிஷனர் ஜெய சுப்பிரமணியன் விசாரணை நடத்தி, ராதா அளித்த வாக்கு மூலத்தையும் பதிவு செய்தார். இதை தொடர்ந்து பைசூலிடம் விசாரணை நடத்துவதற்காக பொலிசார் அவரை தேடினர்.

ஆனால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ராதா, பைசூலுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 4ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை ராதா பைசூலுக்கு தண்டனை வாங்கி தரும் வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது..

திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் குடும்பம் நடத்திய பைசூல் நான் ஒரு முறை கர்ப்பமானவுடன் பதறி துடித்து அதனை கலைத்து விடலாம் என்றார். நாம்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே, என்று கேட்ட போது, இப்போது குழந்தை வேண்டாம் என்று கூறி கருவை கலைப்பதற்கு அவரே கையெழுத்துப் போட்டுள்ளார். இப்படி என்னுடன் பைசூல் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

நான் விமான பணிப் பெண்ணாக பயிற்சி பெற்றுள்ளேன். அப்போது எனது நண்பர்கள் 3 பேருடன் நான் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் பற்றியும் பைசூல் அவதூறு பரப்பியிருக்கிறார். 5 பேரை நான் திருமணம் செய்துள்ளதாகவும் 13 வயதில் எனக்கு மகன் இருப்பதாகவும் பொய்யான தகவல்களை அவர் கூறியுள்ளார்.

நான் முதலில் அவருக்கு கொடுத்த 25 லட்சம் பணத்தை எனது நகைகளை அடகு வைத்துதான் தயார் செய்தேன். பின்னர் நகைகளை மீட்பதற்காக ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள எனது வீட்டையும் விற்றுள்ளேன். தற்போது என்னுடன் சமாதானமாக செல்ல பலரை தூது விட்டுக் கொண்டிருக்கிறார்.

நான் அவருக்கு கொடுத்த மொத்த பணம் 50 லட்சமும் எனக்கு கிடைக்க வேண்டும். சட்டப்படி பைசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நான் ஓயப்போவதில்லை. தன் மீது குற்றம் இல்லையென்றால் ஏன் ஓடி ஒளிய வேண்டும். பெங்களூரிலோ, கிழக்கு கடற்கரை சாலையிலோ பைசூல் தலைமறைவாக உள்ளார். அவர் மீது கமிஷனர் அலுவலக்தில் மீண்டும் புகார் செய்ய உள்ளேன் என்று ராதா தெரிவித்தார்.