கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் காட்டிய வாலிபர் கைது!!

963

mobileகையடக்கத் தொலைபேசியில் ஆபாச காட்சிகளை பதிவேற்றி அவற்றை நண்பர்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்பிட்டி – தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான குறித்த இளைஞன் பாடசாலை மாணவர்களிடம் அவற்றை காண்பித்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சந்தேகநபர் மீட்கப்பட்ட கைத்தொலைபேசியுடன் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.