வவுனியாவில் காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து காப்புறுதி நிறுவன அணிகளும் கலந்துகொண்டன.
இறுதிப் போட்டியில் AIA காப்புறுதி நிறுவன அணியும் யூனியன் காப்புறுதி நிறுவன அணியும் மோதின. இதில் யூனியன் அணி வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது.
வெற்றிபெற்ற யூனியன் அணிக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது. இன் நிகழ்வில் அனைத்து காப்புறுதி நிறுவன முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.







