தற்கொலைக்கு முயன்ற திருநங்கைக்கு நேர்ந்த பரிதாபம்!!

691

 

திருநங்கை காவலர் நஸ்ரியா

தற்கொலை முயற்சிக்குப் பின் மீண்டும் பணியில் சேர்ந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா. இவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். அவர் சுமார் 21 நாட்கள் திடீரென பணிக்கு வராமல் இருந்தார்.

அதனால் அவருக்கு துறையினரால் நோட்டிஸ் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் கடந்த திங்கட்கிழமை பணிக்கு வந்தார். ஆனால் அன்று இரவு நஸ்ரியா விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அவர் தன்னுடைய சக காவலர்கள் மூவர் தனக்கு மன உளைச்சல் அளித்ததால் தற்கொலை செய்துக் கொள்ள முயன்றதாக புகார் அளித்தார். இது மக்களிடையே பரபரபை உண்டாக்கியது. இது குறித்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்ட் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நஸ்ரியா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில் நேற்று மீண்டும் பணியில் சேர்ந்தார். இன்று அவரை மாவட்ட சூப்பிரண்ட் அதிகாரி ஓம்பிரகாஷ் மீனா ஆயுதக் காவல் பிரிவில் இருந்து பாஸ்போர்ட் சரிபார்க்கும் துறைக்கு மாற்றி உள்ளார்.

நஸ்ரியாவுக்கு தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீது பணியிட மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.