வவுனியாவில் தடைசெய்யப்பட்ட களைநாசினியுடன் இருவர் கைது!!

748

தடைசெய்யப்பட்ட களைநாசினியை கடத்திச் செல்லமுற்பட்ட இருவரை செட்டிகுளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் மேற்பார்வையில் பொலிஸ்அத்தியட்சகர் தென்னகோனின் நெறிப்படுத்தலில் செட்டிகுளம் பொலிஸ்நிலய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீரவின் தலைமையில் குறித்த கைதுநடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று காலை மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு வாகனத்தை செட்டிகுளம் நகர்ப்பகுதியில் வழிமறித்த பொலிசார் அதில் சோதனைகளை மேற்கொண்டபோது தடைசெய்யபட்ட களைநாசினியை யூரியா பையில் கடத்திசெல்வது தெரியவந்தது.

குறித்த சொகுசுவானில் இருந்து 600 கிராம் அளவில் சிறுபைகளாக பொதிசெய்யபட்ட 6 ஆயிரம் கிலோ நிறையுடைய தடைசெய்யபட்ட கிளைபோசெட் மருந்துகளை பொலிசார் கைப்பற்றினர்.

அதன் மதிப்பு சுமார் 39 இலட்சம் என போலிசார் தெரிவித்தனர். வானில் பயணித்தவர்களை கைதுசெய்த பொலிசார் பயணித்த வாகனத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துசென்றனர்.

கைதுசெய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.