வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் கிராமத்தில் மக்களின் அத்தியவசிய தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட தாய்சேய் நிலையம் மற்றும் பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு இன்று அதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
முன்னாள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானால் தாய்சேய் நிலையத்துக்கு 20 இலட்சம் ரூபாய் நிதியும் பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்காக 7 இலட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு அதன் கட்டுமான பணிகளையும் இன்று ஆரம்பித்துவைத்தார்.
குறித்த நிகழ்வில் கிராம பொது அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








