பிளாக் பாண்டி தனது 7 வருட காதலியை கரம் பிடித்தார்!!

432

Black pandiவளர்ந்து வரும் நகைச்சுவை நடிகரான பிளாக் பாண்டிக்கும் அவரது காதலி உமேஸ்வரி பத்மினிக்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தேறியது.

சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமான பாண்டி அங்காடித் தெரு உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் வளரும் நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ள அவரும் எம்.பி.ஏ பட்டதாரியான உமேஸ்வரி பத்மினியும் காதலித்து வந்தனர்.

இந்தக் காதல் நேற்று திருமணத்தில் முடிந்தது. இருவரும் 7 வருடமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு வீட்டார் சம்மதத்துடன் சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தேறியது.

திருமணத்தில் பெரும் திரளானோர் திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.