முல்லைத்தீவில் கிணற்றில் வீழ்ந்து மூன்று வயதுச் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!!

372

றஜீவன் றெபின்சன்

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியில் மூன்று வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். றஜீவன் றெபின்சன் என்னும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் கவனக்குறைவின் காரணத்தினால் சிறுவன் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



மேலும் குறித்த சிறுவனின் சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக நேற்று வைக்கப்பட்ட நிலையில் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.