கனவுகள் ஏன் வருகின்றது? இந்த கனவுகள் கண்டால் ஆபத்தாம்!!

1


 

கனவுகள் ஏன் வருகின்றது?


ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வருவது இயல்பு. இத்தகைய கனவுகள் ஏன் வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். மேலும் கனவுகள் பற்றி சில உண்மைகளைப் பற்றி பார்ப்போம்.கனவுகளுக்கான காரணங்கள் : உடலில் உள்ள பித்தம், வாதம், கபம் போன்ற தாதுக்கள் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்கள் கூட கனவு வருவதற்கு காரணமாக இருக்கலாம்.
எந்தப் பொருளையாவது பற்றி அதிகமாக நினைத்துக்கொண்டு அல்லது கவலைப்பட்டுக்கொண்டு இருத்தல் மற்றும் எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினைகள் போன்ற காரணங்களாலும் ஏற்படலாம். உடலில் உள்ள ரகசியமான உள்நோய்கள் மற்றும் பிறருடன் முன்பு கொண்டுள்ள பழக்கம் இது போன்ற பலவகை காரணமாக கனவு ஏற்படலாம்.


பலிக்காத கனவுகள் எது? பகல் நேரத்தில் காணும் கனவுகள், காலை விழித்ததும் மறந்துபோகும் கனவுகள், நீண்ட நேரம் தொடர்ச்சியாக காணும் கனவுகள், நள்ளிரவுக்கு முன்னே காணும் கனவுகள் ஆகியவை பலிக்காதாம்.


தீய கனவுகள் என்ன? ஒருவருடைய கனவில் நாய், நரி, ஆண் எருமை, கருமையான பெண், கருமை நிறமுள்ள விலங்குகள் ஆகியவற்றை கண்டால், துக்கம் மற்றும் பயம் ஏற்படும் என்று அர்த்தமாம். ஓடுவது போல கனவு வந்தால், அதற்கு இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அங்கேயே தொடர்வது தீமை நேரிடும் என்று அர்த்தம்.

சிவந்த உடை, கருமை நிற உடை, சிவந்த சந்தனம் பூசிய பெண், எள், பன்றி, பூனை ஆகியவற்றை கனவில் கண்டால், அது மரணத்தைக் குறிக்கும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவை விழுவது போன்ற காட்சிகளைக் கனவில் கண்டால். அது துக்கம், மரணபயம் ஏற்படும் என்று அர்த்தம்.

கடல், தாமரைப் பொய்கை, மணல் திட்டு ஆகியவற்றைக் கனவில் கண்டால் அதற்கு செல்வம் நாசம் ஏற்படும் என்று அர்த்தம். எண்ணெய் தேய்த்து குளித்தல், பல் விழுவது போன்று கனவில் கண்டால், அதற்கு நோய் வாய்ப்பட நேரிடும். கஷ்டம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

கனவில் பெரிய மணி ஓசை வந்தால், அது ஒரு துன்பத்திலிருந்து விலக இருக்கிறோம். அந்தத் துன்பத்தை ஏற்படுத்திய செயலை மீண்டும் செய்யக் கூடாது என்று அர்த்தம்.

ஒருவரின் கனவில் காவல் நிலையம் என்றால் செய்கின்ற முயற்சியில் கவனம் தேவை. பிச்சை எடுத்தல் என்றால் சரிவு ஏற்பட உள்ளது. கடிகாரம் என்றால் தடுமாற்றம் ஏற்படும். மழைத் தூறல் என்றால் உறவினர்கள் மூலம் பிரச்சனை ஏற்படும் என்று அர்த்தமாகும். இது போன்ற கெட்ட கனவுகளைக் காண நேரிட்டால், உடனே எழுந்து கை, கால்கள் சுத்தம் செய்து, திருநீறு அணிந்து, தெய்வ நாமத்தை 12 முறை உச்சரித்து வணங்க வேண்டும்.