இலங்கையை அடிப்பணிய வைத்துள்ள சீனா : அமெரிக்கா எச்சரிக்கை!!

331

இலங்கை அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் தமது இறைமையை அடகுவைக்க பலவந்தப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடன்பொறி மூலமே சீனா இதனை பெற்றுக்கொண்டுள்ளது. எனவே சீனா, தமது கடன்பொறித்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அமரிக்கா கோரியுள்ளது.

அமரிக்காவின் பிரபல காங்கிரஸ் சட்டவாக்குனரும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு உபக்குழுவின் தலைவருமான, டனா ரொஹ்ராபெச்சர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

சீனாவைப் பொறுத்தவரையில் அது, சிறிய நாடுகளின் அடித்தள கட்டமைப்புக்கு அதிக வட்டியில் நிதியளிப்பதன் காரணமாக வறுமையான நாடுகள், அவற்றை மீளச்செலுத்துவதில் பிரச்சினையை எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில் வறுமையான நாடுகள், தாம் பெற்றக்கடன்களை மீளசெலுத்த முடியாதபோது சீனா, அந்த நாடுகளின் சொத்துக்களை நேரடியாக கையகப்படுத்துகிறது.

இதன் முக்கிய கட்டமே ஹம்பாந்தோட்டை துறைமுக கையக்கப்படுத்தல் நடவடிக்கையாகும் என்று அமரிக்காவின் பிரபல காங்கிரஸ் சட்டவாக்குனரும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு உபக்குழுவின் தலைவருமான, டனா ரொஹ்ராபெச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை சீனா நிறுத்திக்கொள்ளவேண்டும். இலங்கையை பொறுத்தவைரையில் தற்போது அரசியலமைப்பு பிரச்சினையை எதிர்கொள்கிறது.

இதுவும் சீனாவின் கடன் பளு தொடர்பான பிரதிபலிப்பே என்று டனா ரொஹ்ராபெச்சர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-