மைத்திரி முன்னிலையில் மீண்டும் பிரதமராகிறார் ரணில்?

309

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதிவிப்பிரமானம் செய்து கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பார்த்து ஒட்டு மொத்த இலங்கையர்கள் மட்டுமல்ல, சர்வதேச நாடுகளும், உள்நாட்டு ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் காத்திருந்தன.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியிட்டு இருக்கிறது.

இன்று மாலை 4 மணிக்கு இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தாலும், நீதிமன்றத் தீர்ப்புக்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருந்தன.

நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் என்று பலர் குவிந்திருந்த நிலையில் சிறிசேன, நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு கலைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்துரைத்துள்ள அவர், இன்று இரவு மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்பிரமானம் செய்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்றிரவு கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.