பரபரப்பான சூழ்நிலையில் அவசர சந்திப்பில் மைத்திரி – மஹிந்த : பதவி விலகல் அறிவிக்கப்படுமா?

895

இலங்கையில் அரசியல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மைத்திரி – மஹிந்த மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் சமகால நெருக்கடி நிலைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது நீதிமன்ற தீர்ப்புக்கு மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கை தொடர்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பை மஹிந்த வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது