முதலையிடம் சிக்கி போராடிய சித்தப்பாவை காப்பாற்றிய 15 வயது சிறுவன் : கிடைக்கப்போகும் கெளரவம்!!

342

 

15 வயது சிறுவன்

இந்தியாவில் முதலையின் பிடியிலிருந்து சித்தப்பாவை காப்பாற்றிய சிறுவன் வீரதீர விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான். ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தின் கந்திரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சிதுமாலிக்(15).

அங்கிருக்கும் அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் இவன், கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் திகதி தனது சித்தப்பா வினோத் மாலிக் என்பவருடன் ஹன்சினா ஆற்றங்கரை பகுதியில் உள்ள வயலுக்கு சென்றான்.

அப்போது அருகில் குளத்தில் இருந்த முதலை ஒன்று வினோத் மாலிக்கை கவ்வியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முதலையிடமிருந்து தப்பிப்பதற்கு போராடிய போது, சிது உடனடியாக அருகில் இருந்த மூங்கில் குச்சியை எடுத்து முதலையின் தலையில் பலமாக் அடித்தான்.

இதனால் முதலை வலி தாங்கமுடியாமல், மாலிக்கை விடுவித்து, மீண்டும் குளத்தின் உள்ளே சென்றது. அதன் பின் உயிர் தப்பிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நல்ல நிலையில் உள்ளார்.

இந்நிலையில் நாட்டில் வீர சாகசம் செய்த சிறுவர்களை தேசிய வீரதீர விருதுக்கு குழந்தைகள் நலனுக்கான இந்திய கவுன்சில் தேர்வு செய்து வருகிறது. இந்தாண்டு வீரதீர விருதுக்கு சிது மாலிக் தெரிவு செய்யப்பட்டுள்ளான். இவனுக்கு அடுத்த மாதம் 23-ஆம் திகதி பிரதமர் மோடி இந்த விருதை வழங்குகிறார்.

இத்தகவல் சிது மாலிக் படிக்கும் வசுதேப்பூர் உயர்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், கந்திரா கிராம மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.