டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு தண்டனை குறைப்பை எதிர்த்து மனு!!

445

Delhi_high_courtடெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிறுவன் தண்டனை குறைக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி 26 வயது பிசியோதெரபி மாணவி ஓடும் பஸ்சில் 5 பேர் கும்பலால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதில் தொடர்புடைய ஒரு முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டான். 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு குற்றவாளி சிறுவன் என்பதால் சிறுவர் நீதிமன்ற நீதிபதி 3 ஆண்டு சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இறந்த மாணவியின் தந்தை உயர் நீதிமன்றில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் தனது மகள் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கில் ஒரு குற்றவாளி மைனர் என்பதால் 3 ஆண்டு தண்டனை விதித்துள்ளது.

மைனர் மீதான குற்றத்தின் தன்மை மற்றும் தண்டனை விதிப்பது பற்றி கிரிமினல் நீதிமன்றுதான் முடிவு செய்ய வேண்டும். சிறார் நீதிமன்று இதில் தீர்ப்பு வழங்க முடியாது என்று கூறியிருந்தார்.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.