இவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும் தீர்மானத்தில் ஐ.தே.முன்னணி!!

263

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், விஜயதாச ராஜபக்ச, திலங்க சுமதிபால, தயாசிறி ஜயசேகர, மகிந்த சமரசிங்க ஆகியோரை, ஜனாதிபதி அழுத்தங்களை கொடுத்தாலும் எந்த காரணம் கொண்டும் இணைத்துக்கொள்ளக் கூடாது என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி இணைய வேண்டுமாயின் அணியாகவோ கட்சியாகவே இணைத்துக்கொள்ளப்பட கூடாது எனவும் அனைவரும் தனித்தனியாக ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் இணைய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் 5 முதல் 7 பேரை மட்டுமே இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களை தவிர வேறு அமைச்சுக்களை வழங்குவதில்லை எனவும், ஜனாதிபதி ஏற்கனவே வர்த்தமானியை வெளியிட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிறுவனங்களை அவரிடம் இருந்து பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

19வது அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ளலாம். ஏனைய அமைச்சுக்கள் அமைச்சரவைக்கு வழங்கப்பட வேண்டும்.

இதனை புதிய அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்லது என்பதால், அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக இருக்க வேண்டும் ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிகை 45 ஆக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-