மேற்கு வங்க மாநிலத்தில் தாய் ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகனை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அவரை சங்கிலியால் கட்டிப்போட்டுள்ளார்.
மேற்வங்கத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பர் டாப்சா சிங். இவரது மகன் ஆரோடி சிங். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த நான்கு வருடங்களாக சங்கிலியால் கட்டிப்போட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து இவரது தாய் கூறுகையில், மாற்றுத்திறனாளியான எனது மகனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த செயலை செய்துள்ளேன்.
மேலும் பொதுமக்களிடம் காரணமில்லாமல் எனது மகன் அடிவாங்குவது எனக்கு கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இவர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது மகனை குணப்படுத்தமுடியாமல் தவித்து வருகிறார்.





