சிறுநீரை பீய்ச்சி அடித்து ரோபோவை இயக்கும் செயற்கை இருதயம்!!

337

roboசிறுநீரை பீய்ச்சி அடித்து ரோபோவை இயக்கும் செயற்கை இருதயத்தை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் ரோபோடிக் லேப் மற்றும் மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ரோபோவுக்கு புதுவிதமான செயற்கை இருதயம் கண்டுபிடித்துள்ளது.

இது மனித இருதயம் போன்ற அமைப்பு மற்றும் செயல்பாட்டுடன் கூடியது. நினைவாற்றலுடன் கூடிய ஆயுதக் கலவையில் இதன் பாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவை மிக நுண்ணிய எரிபொருள் செல்களால் ஆனவை. இதன்மூலம் மனித சிறுநீர் கழிவு மற்றும் அழுகிய பழங்கள், காய்கறிகள், இறந்த பூச்சிகள், கழிவுநீர் போன்றவற்றின் மூலம் மின்சாரம் தயாரித்து தானே இயங்க முடியும்.

அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ரோபோவின் செயற்கை இருதயத்தின் செயல்பாடு சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது அது மனித சிறுநீரை பீய்ச்சி அடித்து அதன்மூலம் தானாகவே வெற்றிகரமாக இயங்கியது.