உள்ளங்கையளவே உள்ள குழந்தையை முத்தமிடும் அம்மா : நெகிழ்ச்சி பின்னணி!!

702

 

உள்ளங்கையளவே உள்ள குழந்தை

குழந்தை ஒன்று வயிற்றில் வளரும் மகிழ்ச்சியில் குடும்பமே அதற்கு பெயர் வரைக்கும் வைத்து கொண்டாடி மகிழ்ந்த நேரத்தில், அதை இழக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட, அந்த குழந்தையை தனது உள்ளங்கையில் ஏந்திய அந்த தாயின் புகைப்படம் அவளது மன வலியை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்து காண்போரை நெகிழச் செய்கிறது.

அவுஸ்திரேலையாவைச் சேர்ந்த Justine Zampogna (28) தான் இரண்டாவது முறை கருவுற்றபோது மசக்கையால் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார். எனவே அது ஒரு பெண் குழந்தையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில், அவரும் அவர் கணவரும் அதற்கு Gia என்று பெயரிட, அவர்களது மூத்த மகனான Chase, அதற்கு Gigi என்று பெயர் வைத்திருக்கிறான்.

ஆனால் திடீரென ஒரு நாள் Zampogna வயிற்றிலிருந்த குழந்தையின் மூளையின் வளர்ச்சி தடை பட்டிருக்கிறது. அதனால் சில மணி நேரம் மட்டுமே அந்த குழந்தை பிழைத்திருக்கும் என தெரியவந்ததால், ஒன்றில் அதைக் கருக்கலைப்பு செய்து விடலாம் அல்லது பிரசவிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

16 வாரக் குழந்தையான Gia, முழு வளர்ச்சியடைந்து பிறப்பாள் என காத்திருந்த பெற்றோர், அவளை பெற்றெடுப்பது என முடிவு செய்தனர். அவள் பிறந்த போது உள்ளங்கையளவு இருந்த Giaவை கையில் ஏந்திய Zampognaவின் வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை, கூடவே சோகத்தில் அவரது கணவரும் மகனும் சேர்ந்து கொள்ள, Gia வானில் ஒரு நட்சத்திரமாகிவிட்டாள் என்று மகனை ஆறுதல் படுத்திவிட்டாலும், தங்களால் Giaவின் இழப்பை தாங்கிக் கொள்ள இயலாமல் தவித்திருக்கிறார்கள் Zampognaவும் கணவரும்.

உள்ளங்கையில் தனது குழந்தையை ஏந்திக் கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள Zampogna, ஒரு குழந்தையை இழக்கும்போது அதனால் அந்த குழந்தையின் தாயும் தந்தையும் படும் பாடு மிகவும் கோரமானது.

அது வெறும் கருச்சிதைவு என்று எண்ணும் உலகின் முன், தங்கள் குறை பிரசவக் குழந்தை இறந்ததை வெளியில் சொல்லவும் இயலாமல், தாங்கிக் கொள்ளவும் இயலாமல், அவர்கள் படும்பாடு பயங்கரமானது என்று கூறும் Zampogna, தன் போன்று குறை பிரசவத்தில் குழந்தையை இழந்தவர்களை, அதைக் குறித்துள்ள உங்கள் கவலையை மனம் விட்டு பேசுங்கள் என்கிறார்.

அது வெறும் குறை பிரசவ குழந்தை அல்ல, அது உங்கள் குழந்தை, அதற்கு பெயரிடுங்கள், அதைக் குறித்து எப்போதும் பேசுங்கள், உங்கள் கவலை குறையும் என்கிறார் Zampogna.