வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் மைதான அபிவிருத்திக்கு நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட பணத்தின் மூலமாக கரப்பந்தாட்ட மைதானத்திற்கான மின்னொளி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கழகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (18.12.2018) நடைபெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் சார்பாக புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் கழக நிர்வாகத்திடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பே.அனோஜன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் திருச்செல்வம் புவி ஆகியோர் கலந்துகொண்டனர்.