எங்களால் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது : ஷாருக்கான் குறித்து சல்மான் கான் கருத்து!!

275

salman2008ம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த விழாவில் கத்ரீனாவின் நெருங்கிய நண்பரான சல்மான்கான் கலந்து கொண்டார். ஷாருக்கானும் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்தபோது சல்மான் கானுக்கும் ஷாருகானுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அன்றைய நாளிலிருந்து தொழில் ரீதியிலான போட்டியாளராக இருந்த ஷாருக்கான் இந்த பிரச்சினைக்குப் பிறகு சல்மான் கானின் முழு எதிரியாக மாறினார். ஷாருக்கானுடன் விரோதபோக்கு இருந்தும் சமீபத்தில் இப்தார் நோன்பில் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து தழுவிக் கொண்டனர்.

இந்நிலையில் மும்பையின் மிக பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் சல்மான்கான் கலந்துகொண்டார். அப்போது திருமணம், நெருக்கம், போட்டி, நண்பர்கள் மற்றும் ஷாருக்கான் குறித்தும் பேசினார். அப்போது சல்மான் கான் கூறியதாவது..

இப்தார் நோன்பில் நான் ஷாருக்கானை கவனிக்காது சென்று இருந்தால் அது தவறாக இருந்து இருக்கும். நான் அவர் உட்கார்ந்து இருப்பதை கவனித்தேன். அதனால், அவர் அருகே சென்று சலாம் அழைக்கும் என்றும் கூறினேன். எங்களுக்கிடையே எந்த சண்டையும் நடக்கவில்லை. நாங்கள் இருவரும் அன்று ஒருநாள் அழகான இரவை பெற்றோம். ஆனால் நாங்கள் இருவரும் பழகிக்கொள்ளவில்லை. அது கொஞ்சம் என்னை பாதித்தது.

அதே நாள் இரவு அவர் என்னிடம் வந்து பேசியிருக்க முடியும். ஆனால் அவர் வர விரும்பவில்லை. ஆனால் நான் அதை விட்டுவிடு என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

ஷாருக்கான் எனது வீட்டு வழியாக தினந்தோறும் நான்கு முதல் ஐந்து முறை கடந்து செல்கிறார். அவர் எனது வீட்டிற்கு வந்து பெல் அடித்து இருக்கணும். இப்தார் நோன்பு சந்திப்பிற்குபிறகு நான் அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன்.

ஆனால் இரு நடிகர்கள் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது என்று வலியுறுத்தி கூறுகிறேன். ரொமாண்டிக் காட்சிகளில் ஷாருக்கான் மிக தத்ரூபமாக நடிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் அவரை யாரும் ஜெயிக்க முடியாது என்று அவர் கூறினார்.