வவுனியாவில் பாம்பு தீண்டி ஒருவர் மரணம்!!

1234

வவுனியாவில் பாம்பு தீண்டி ஓருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று(20.12.2018) அதிகாலை வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குடபட்ட பிரமனாலங்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த நபர் தனிமையில் வசித்துவந்துள்ளதுடன் இன்று அதிகாலை அவரிற்கு பாம்பு தீண்டியதாக கூறப்படுகின்றது.

அயலவர்களின் உதவியுடன் பூவரசங்கும் வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கபட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவர் வரும்வழியிலேயே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பிரமனாலங்குளம் பகுதியை சேர்ந்த பசுபதி (வயது 65) என்ற முதியவரே மரணமடைந்துள்ளார். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.