நடிகை சமந்தாவுக்கு மீண்டும் தோல் அலர்ஜி எற்பட்டுள்ளதாக செய்தி பரவியுள்ளது. அவர் தற்போது லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. தோல் அலர்ஜி காரணமாக சமந்தா படப்பிடிப்பில் இருந்து வெளியேறியதாகவும் இதனால் படப்பிடிப்பை ரத்து செய்து படக்குழுவினர் சென்னை திரும்பியதாகவும் கூறப்பட்டது.
இதற்கு சமந்தா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது..
என்னைப் பற்றி பரவிய செய்திகளில் உண்மை இல்லை. லிங்குசாமி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறுவதும் தவறு. கடுமையான உடல் நலக்குறைவு எனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவி உள்ளது. நான் தற்போது 5 படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். ஒரே நேரத்தில் இந்த படங்களில் தொடர்ந்து நடிப்பதால் உடலில் உஷ்ணபாதிப்பு ஏற்பட்டு தளர்ச்சியானேன்.
இதனால் லிங்குசாமியிடம் அனுமதி பெற்று இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தேன். தற்போது நலமாக இருக்கிறேன். வரும் 7ம் திகதி முதல் மும்பையில் சூர்யாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என்று சமந்தா கூறினார்.





