என்னை நம்பு கீர்த்தனா… நான் எதுவும் செய்யவில்லை : தற்கொலை செய்துகொண்ட கணவனின் உருக்கமான கடிதம்!!

582

 

தற்கொலை செய்துகொண்ட கணவன்

டெல்லியில் பணிபுரியும் இடத்தில் இருபெண்கள் பாலியல் புகார் கொடுத்ததால், மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 35 வயதான ஸ்வரூப் ராஜ் அமெரிக்க நிறுவனமான ஜென்பேக்ட் நிறுவனத்தின் இந்திய கிளையில் கடந்த 2007ம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்.

இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அதே நிறுவனத்தில் பணிபுரியும் கீர்த்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் நொய்டாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தனர். சமீபத்தில் தான் ஸ்வரூப் ராஜிற்கு பணிஉயர்வு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் இருபெண்கள், ஸ்வரூப் ராஜ் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நிறுவனத்தில் புகார் அளித்தனர். இதனால் மனமுடைந்திருந்த கணவனை கீர்த்தனா மரியாதைக்குறைவாக நடத்தியதாக தெரிகிறது.

அந்த சமயம் நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், “உங்கள் மீது இரண்டு பெண் பணியாளர்களால் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை முடியும் வரை நீங்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.

இந்த காலகட்டத்தில் உங்கள் பணி குறித்து எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை. நீங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க தேவையில்லை. உங்களால் வேறு எந்த நிறுவனத்திலும் பணிக்கு சேர்ந்து பணிபுரிய முடியாது என்ற விதிகள் கண்டிப்பாக உங்களுக்கு பொருந்தும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாலியல் புகாரால் ஏற்கனவே மனமுடைந்து காணப்பட்ட ஸ்வரூப் ராஜ், பணியிடை நீக்கத்தால் விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். பணியிலிருந்து வீடு திரும்பிய அவருடைய மனைவி, கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ஸ்வரூப் ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது மனைவிக்கு எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில், ஹாய் கீர்த்தனா, உன்னை நான் எவ்வளவு காதலிக்கிறேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். என் மீது இரண்டு பெண்களால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது; என்னை நம்பு சத்தியமாக நான் ஏதும் செய்யவில்லை. எனக்குத் தெரியும் இந்த உலகம் இதை புரிந்து கொள்ளும் என்று. நீயும், நம் குடும்பமும் என்னை நம்புங்கள்.

என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. ஜென்பேக்ட் நிறுவனம் முழுவதற்கும் இது தெரியும், எனினும் யாரையும் எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை. நீ தைரியமாக இருக்கவேண்டும்; மேலும் உன் கணவர் ஏதும் செய்யவில்லை என்ற மரியாதையோடு உன் வாழ்க்கையை வாழ வேண்டும்.