சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் 2013ம் ஆண்டுக்கான LG மக்கள் தெரிவு விருதை இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி பெற்றுக் கொண்டுள்ளார்.
அதன்படி இந்த விருதினை பெறும் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் மகேந்திர சிங் தோனி தனதாக்கியுள்ளார்.
LG மக்கள் தெரிவு விருதை 2010ம் ஆண்டு சச்சின் டென்டுல்காரும் 2011-2012 இல் இலங்கை வீரர் குமார் சங்கக்காரவும் பெற்றுக் கொண்டனர்.
இம்முறை விருதுக்கு அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் கிளார்க், இங்கிலாந்தின் அலெஸ்ரிய குக், இந்தியாவின் விராத் கோலி, தென்னாபிரிக்காவின் ஏபிடி வில்லியஸ் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.





