வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான அலுவலகம்!!

368

வவுனியாவை மையமாகக்கொண்டு வடமாகாணத்திலுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுப்பதற்கான வடமாகாண மகளிர் முன்னேற்றக் கழகம் அமைப்பு ஒன்றின் உருவாக்கமும் அலுவலகத் திறப்பும் இன்று(21.12) காலை 9.30 மணியளவில் தாண்டிக்குளம் பிரதான கண்டி வீதியில் விவசாயக் கல்லூரிக்கு முன்பாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் வடமாகாண மகளிர் முன்னேற்றக் கழகத்தில் வடக்கிலிருந்தும் 36 கிராமங்களிலுள்ள பெண்களை இணைத்தும், வசதியற்ற மாணவர்களுக்கு உதவிகள், போதைப்பாவணை, பெண்கள் சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் இறுவட்டு, போன்றவற்றிற்கு எதிராகவும் ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் இரண்டு பெண்களை உள்ளடக்கிய செயற்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாண மகளிர் முன்னேற்றக்கழகத்தின் தலைவி காமராஜ் இராஜகுமாரி, ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சத்தியநாதன், வவுனியா பிரதேச செயலகப் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிவதர்சன் சுபாஜினி மற்றும் பெண்கள் அமைப்புக்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.