மகள்களை வைத்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றிய தாய் : கோடிகளில் புரண்டது அம்பலம்!!

323

 

இளைஞர்களை ஏமாற்றிய தாய்

சென்னையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தாய், மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாளர் சேர்ப்பு அதிகரியாக வேலை செய்து வந்த அமுதா, வேலை வேண்டி இணையதளத்தில் பதிவு செய்த இளைஞர்களின் தகவல்களை சேகரித்துள்ளார்.

அந்த இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.50 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட நங்கநல்லூரை சேர்ந்த முத்துராஜ் என்பவர் கடந்த மாதம் சென்னை காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார்.

அதில், வளசரவாக்கத்தை சேர்ந்த அமுதா மற்றும் அவரது மகள் மோனிஷா ஆகியோர் தன்னுடைய மகனுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் பெற்றுகொண்டு தலைமறைவாகிவிட்டதாகவும், பணத்தை மீட்டு தருமாறும் குறிப்பிட்டிருந்தார்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், பெங்களூரில் சொகுசு வாழ்க்கையில் இருந்த அமுதா அவருடைய மகள்கள் மோனிஷா, பூஜா மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் லட்சுமி, பூஜா ஆகியோர் உடந்தையாக இருந்த காரணத்தினாலும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி 170 பேரிடம் சுமார் 1.50 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் புழல் சிறையில் அடைத்தனர்.