அமெரிக்காவில் நோயை பரப்பிய மருத்துவருக்கு 39 வருட சிறை!!

393

davidஅமெரிக்காவில் ஊசி மூலம் மஞ்சள் காமாலை நோயை பரப்பிய மருத்துவருக்கு 39 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூஹம்ப்ஷியர் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் கியாட் கோவ்ஸ்கி (34). இருதய மருத்துவரான இவர், 3 மாகாணங்களில் 18 மருத்துவமனைகளில் மாறி மாறி பணி புரிந்தார்.

இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த போது அவரை பொலிஸார் கைது செய்தனர். 46 பேருக்கு மஞ்சள் காமாலை நோயை பரப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் தடை செய்யப்பட்ட மருந்துகளை பலருக்கு செலுத்தியதும், பல மருந்துகளை திருடியதும் தெரியவந்தது.

இவர் வலி நிவாரண மருந்துகளை திருடி அதனுடன் அல்ஹோலை கலந்து கெட்டுபோன ஊசி மூலம் நோயாளிகளின் உடலில் செலுத்தினார். அதனால் பலர் மஞ்சள் காமாலை, கல்லீரல் உள்ளிட்ட நோயினால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட மருத்துவர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 39 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.