பிரியாணி, என்றென்றும் புன்னகை, ரம்மி உட்பட14 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்!!

473

re14 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீசாகின்றன. இந்த வருடத்தில் கடைசி மாதம் என்பதால் பெரிய மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் நிறைய வருகின்றன.

வருகிற 6ம் திகதி ஈகோ, கல்யாண சமையல் சாதம், தகராறு, வெள்ளை தேசத்தின் இதயம் ஆகிய 4 படங்கள் ரிலீசாகின்றன. கல்யாண சமையல் சாதம் படத்தில் பிரசன்னாவும், தகராறு படத்தில் அருள்நிதியும் நாயகனாக நடித்துள்ளனர்.

வருகிற 13ம் திகதி இவன்வேற மாதிரி, மாலினி 22 பாளையங்கோட்டை, மதயானை கூட்டம் ஆகிய 3 படங்கள் ரிலீசாகின்றன. மாலினி 22 பாளையங்கோட்டை படத்தை ஸ்ரீப்ரியா இயக்கி உள்ளார். நித்யாமேனன் நாயகியாக வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் பிரபுமகன் விக்ரம்பிரபு நாயகனாக நடித்துள்ளார்.

வருகிற 20ம் திகதி கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் பிரியாணி, ஜீவா, திரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை படங்கள் வருகின்றன. இதேநாளில் சேரன் இயக்கும் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை, தலைமுறைகள், விழா படங்கள் வருகின்றன.

வருகிற 27ம் திகதி விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி, கஞ்சா கருப்பு தயாரித்து நடிக்கும் வேல்முருகன் போர்வெல்ஸ் படங்கள் ரிலீசாகின்றன.