2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் இறுதி நொடியில் உயிர் தப்பிய அனுபவத்தை 14 வருடங்களின் பின்னர் இலங்கை குடும்பம் ஒன்று பகிர்ந்துள்ளது.
மொரட்டுவ ரயில் நிலையத்தின் மூன்றாவது பிரிவில் ரயில் டிக்கட் பெற்றுக் கொண்டு நானும் எனது கணவரும் அப்போது 12 வயதாக இருந்த மகனுடன், மாத்தறை, கும்புருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் அம்மாவை பார்க்க சென்றோம்.
வேறு நாட்கள் போலின்றி அன்றைய தினம் நேரத்திற்கு ரயில் வருகைத்தந்தது. எனினும் அதில் ஏற முடியாதளவு மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
எப்படியோ கடின முயற்சியில் ரயிலில் ஏறி கதவிற்கு அருகில் நின்றோம். ரயில் அம்பலங்கொட ரயில் நிலையத்தை நெருங்கியவுடன் பயணிகளின் குழுவொன்றை காண முடியவில்லை. எனினும் நாங்கள் நின்றுக் கொண்டே பயணித்தோம்.
சற்று தூரம் முன்னால் ரயில் சென்று நின்றவுடன் கஹவ ரயில் நிலையத்தை கடக்கும் போது ரயில் பக்கத்தை நோக்கி மக்கள் ஓடிவந்ததனை அவதானித்தோம். ரயிலில் இருந்து யாரோ குதித்துவிட்டதாக தான் நினைத்தோம். கடல் வருகின்றதென கூறி கொண்டு அவர்கள் ரயிலுக்குள் ஏறினார்கள்.
ஒன்றும் புரியாமல் நின்ற போது ரயில் நோக்கி கடல் அலை வந்தது. அங்கிருந்த வீடுகள் பாடசாலைகள் அனைத்தை உடைத்து கொண்டு கடல் அலை எங்களை நோக்கி வந்தது. ரயில் முழுவதும் கடல் நீர். மீண்டும் மிகப்பெரிய சத்தத்துடன் கடல் நீர் ரயிலை நோக்கி வந்து ரயிலை சாய்த்தது. அனைவரும் மரணத்துடன் போராடினோம். நானும் எனது மகனும் கணவரும் ரயில் கதவை பிடித்து கொண்டு நின்றோம்.
நாங்கள் இருந்த ரயில் கடல் அலையில் அடித்து சென்று 400 மீற்றர் தூரத்தில் நின்றது. உதவி கேட்பதற்கு ஒருவரும் இல்லை. ரயிலை எட்டி பார்க்கும் அதில் இருந்த அனைவரும் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சிலர் மாத்திரம் போராடி உயிரை காப்பாற்றி கொண்டனர். உயிரிழந்த சடலங்களுக்கு மத்தியில் எழுந்து பார்க்கும் போது கண்டி போன்ற ஊரையே கண்டோம். அங்குள்ள ஒரு விகாரையில் தங்கியிருந்தே உயிர் பிழைத்தோம் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவுகளில் ஏற்பட்ட பாரிய பூகம்பம் சுனாமி அலைகளாக உருப்பெற்று பல நாடுகளை தாக்கியது. இதன்போது இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை தாக்கியது. இதில் பல இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் மாத்திரம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.