நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நய்யாண்டி, ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ், நீ நல்லா வருவடா, வாய் மூடி பேசவும் என வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
நய்யாண்டி படத்தில் தன்னைப் போலவே டூப் நடிகையை வைத்து சில கவர்ச்சிக் காட்சிகளை இயக்குனர் சற்குணம் படமாக்கிவிட்டார் என்று நஸ்ரியா குற்றம் சாட்டியதுடன் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.பேச்சுவார்த்தைக்குப் பிறகு அக்காட்சிகள் நீக்கப்பட்டன. இந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிலர் நஸ்ரியாவின் போக்கு குறித்து விமர்சித்தனர்.
இயக்குனர் சொல்வதுபோல் நடிக்காதது தவறு என்று பகிரங்கமாகவே நயன்தாரா குற்றம் சுமத்தினார். அதற்கு நஸ்ரியா கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில் திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நடித்து வந்த நஸ்ரியாவுக்கு அப்பட ஹீரோ ஜெய்யுடன் காதல் என்று கிசுகிசு பரவியது. இதை ஜெய் மறுத்தார்.
இதற்கிடையில் ஜீவாவுடன் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து நஸ்ரியா நீக்கபட்டார் என்று தகவல் பரவியது. ஆனால் ஜீவா அதை மறுத்ததுடன் நஸ்ரியா தனது படத்தில் நடிப்பதாக தெரிவித்தார்
பிரச்னை ஓய்ந்தது என்று நஸ்ரியா நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். ஆனால் அதற்குள் அடுத்த பிரச்னையில் சிக்கி இருக்கிறார்.
மம்முட்டி மகன் துல்கர் சல்மான் ஜோடியாக வாய் மூடி பேசவும் படத்தில் நஸ்ரியா நடிக்கிறார். இப்படத்தில் துல்கர் மற்றும் நஸ்ரியாவுக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஆகி காட்சிகளில் ஒன்றி நடிப்பதாகவும் நடிப்பையும் மீறி இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதைக் கேட்டு நொந்துபோய் இருக்கும் நஸ்ரியா யார்தான் இப்படிக் கிளப்பிவிடுறாங்களோ என விரக்தியில் புலம்புகிறார்.





