வவுனியாவில் சுனாமி பேரவலத்தின் 14 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு!!

370

இந்தோனேசியா தொடக்கம் இலங்கை வரை ஆட்டிப்படைத்த ஆழிப்பேரலை தந்த பேரவலத்தின் 14 ஆம் ஆண்டை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இந்த விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இன்று(26.12.2018) காலை 8 மணிக்கு இடம்பெற்றது.

இதன் போது நெய்விளக்கேற்றி, மோட்ச அர்ச்சனை செய்து தீபங்கள் ஏற்றப்பட்டு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது.

இதில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்மார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.சூரியராஜா, சமூக ஆர்வலர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.