வவுனியா தர்மலிங்கம் வீதியில் வீதிக்கு வந்த கடைகளால் பயணிகள் அசௌகரியம்!!

685

 

வவுனியா தர்மலிங்கம் வீதியில் வியாபார நிலையங்களுக்கு முன்னால் கொட்டகை அமைத்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால் போக்குவரத்து செய்யும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு முன்னால் உள்ள வீதியானது இருவழிப் போக்குவரத்து வீதியாகும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அவ் வீதி வழியாக பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த வீதியின் இரு மருங்கிலும் உள்ள வியாபார நிலையங்கள் பலவற்றுக்கு முன்பாக வீதிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வகின்றது.

இதன்காரணமாக அவ் வீதியில் விபத்துக்கள் ஏற்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதடன், அவ் வீதியில் பயணிக்கும் பலரும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அசமந்தமாக செயற்படுவதாகவும் நகர மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.