வவுனியா வடக்கில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்!!

331

 

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதன்படி வவுனியா மாவட்டத்தில் மழை காரணமாக வவுனியா வடக்கு பகுதியே பாதிப்படைந்துள்ளது. வவுனியா வடக்கில் மழை காரணமாக பாதிப்படைந்த 132 குடும்பங்களைச் 455 பேருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா வடக்கு பிரதேச செயலகம் ஊடாக எழுகை என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இந்த நிவாரணப் பொருட்களை வழங்கியது.

வவுனியாவில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 132 குடும்பங்களைச்சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 8 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 132 குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களில், 17 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் வவுனியா வடக்கு மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பொது மண்டபத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இவ்வாறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எழுகை அமைப்பினர் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கினர்.