மீண்டும் கொழும்பு அரசியலில் சர்ச்சை : அமைச்சரவை கலைக்கப்படுமா?

463

தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மையப்படுத்தி தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமைச்சரவை எண்ணிக்கையை 45 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுஜன பெரமுன கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுப்பதாயின் ஜனாதிபதி, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டும் என்று பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் உள்ள ஒருவரை வைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்துக்கு செல்வது என்பது நீதி விரோதமான செயல் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

வெறுமனே 8 மாதங்களுக்காக 45 பேர் கொண்ட அமைச்சரவையை ஏற்படுத்துவது நியாயமற்ற செயல் என்றும் யாப்பா செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-