வவுனியாவில் கடும் பனிமூட்டம் : மக்கள் சிரமம்!!

688

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது.

வவுனியாவில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிவரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காணமுடியாத அளவிற்கு காலை கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது.

இதனால் வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி செல்வதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏ9 வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளும் பனிமூட்டத்தால் அவதிக்குள்ளாகினர்.

அதிகாலையில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக குளிரான காலநிலை நிலவுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளதோடு இயல்புநிலை பாதிப்படைந்துள்ளது.